மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்வதற்காக கணவனே மனைவியின் வயிற்றை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நெக்பூர் பகுதியைச் சேர்ந்த பன்னலால் என்பவருக்கு ஏற்கனவே ஐந்து பெண்குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவரது மனைவி ஆறாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

இதனால், தனக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆறாவது குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என எண்ணிய பன்னலால், தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்வதற்காக மிகவும் கொடூரமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அதவாது, மிக கூர்மையான ஆயுதம் ஒன்றை எடுத்து தனது மனைவியின் வயிற்றைக் கிழித்து உள்ளார் பன்னலால்.

இதில் அவரது 35 வயது மனைவி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தற்போது, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து கர்ப்பிணியின் குடும்பத்தினர் போலீசில் கொடுத்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பண்ணலாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொள்வதற்காக கணவன் மனைவியின் வயிற்றைக் கிழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Admins