“கனா காணும் காலங்கள்’, “கல்யாணம் முதல் காதல் வரை’, “லட்சுமி வந்தாச்சு’, “பிரியமானவள்’ போன்ற தொடர்களில் நடித்துள்ளவர் ஹரிப்ரியா.

சின்னத்திரை நடிகையாக தனது பணியை தொடங்கிய இவர், தற்போது “கண்மணி’ தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இவர், சின்னத்திரை நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விக்னேஷ் “வாணி ராணி’ தொடரில் கௌதம் கேரக்டரில் நடித்தவர்.

இவர் தற்போது “பொன் மகள் வந்தாள்’ தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தற்போது பிரிந்துள்ளனர். இந்நிலையில், ஹரிப்ரியா சன் டிவியில் காலை ஒளிப்பரப்பாகும் “வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அசாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதற்கு ஹரிப்ரியா மறுப்பு தெரிவித்துள்ளார், “”அசார் எனது நல்ல நண்பர் அவ்வளவுதான் அவருடன் காதல் என்பதெல்லாம் யாரோ வேண்டுமென்றே கிளப்பிவிடும் கட்டுக்கதை. இதை யாரும் நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.

By spydy