மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்களின் காரணமாக மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மோசமான உணவுப் பழக்கம் மற்றும் எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் இதற்கு காரணமாகும்.

குறிப்பாக, இந்த பிரச்சனைகள் தற்போதைய காலகட்டத்தில் 30 வயதிலேயே தொடங்க ஆரம்பித்து விடுகிறது. இதற்கு தீர்வாக நாட்டு மருந்து பானம் பயன்படும்.

இந்த பானத்தை நாமே தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள்

மஞ்சள் கிழங்கு(1செ.மீ)

இஞ்சி(2செ.மீ)

மிளகு 1/2 தேக்கரண்டி

கேரட் 5 அல்லது 6 ஆகும்.

முதலில் மஞ்சள் மற்றும் இஞ்சியைத் துருவிக் கொள்ள வேண்டும். பின்னர், அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக இணைத்து, மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர், இந்த பானத்தை தினமும் மூன்று வேளையும், உணவு உண்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னர், 50 – 60 மில்லி லிட்டர் பருக வேண்டும்.

நீங்கள் தயாரித்த பானம் கெட்டியாக இருந்தால், தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தில் உள்ள மஞ்சள் கிழங்கு, ஓர் கிருமி நாசினி பண்புகள் கொண்ட பொருள் என்பதால், இது உடலின் மூலைமுடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழித்து நல்ல பாதுகாப்பை வழங்கும்.

இஞ்சியானது நோயெதிர்ப்பு அழற்சி பொருள் என்பதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.

கேரட்டில் ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளன. எனவே, இது அனைத்து எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

இதுவரை நீங்கள் மூட்டு மற்றும் எலும்பு வலிகளுக்கு மருந்து எடுத்து வருபவரானால், இயற்கை வைத்தியத்தைப் பின்பற்றும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம் ஆகும்.

By Admins