பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்கள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை பிரகதி. விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் அம்மாவாக நடித்து வருகிறார்..

 

இந்த நிலையில் நடிகை பிரகதி பிரபல தெலுங்கு இணையதளத்துக்கு ஒரு பேட்டி அளித்த அதில் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

மூத்த பிரபல காமெடி நடிகர் என்னிடம் பா லி யல் ரீதியாக தகாத முறையில் நடந்த சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த நடிகர் நன்றாகவே என்னிடம் பழகினார். ஒரு பிரபல படத்தின் படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்தபோது அவரது பேச்சும் செயலும் அவரது நடவடிக்கையும் தவறான முறையில் இருந்தன.

பா லிய ல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன். ஒரு அளவுக்கு மேல் அவர் தொந்தரவை தாங்க முடியவில்லை. இதனால் அவரை எனது கேரவனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை கேவலமாக இருந்தது. தவ றான மு றையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை என்னிக் கொண்டு தான் நான் உங்களை தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன். அதன்பிறன் அவர் என்னிடம் தவறான முறையில் நடக்கவில்லை..

இவ்வாறு பிரகதி கூறியது பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளார்!

By admin