8 வயது சிறுமி ஒருவர் மெடிக்கலுக்கு தயங்கியபடி வந்தார். கடைக்காரரை அங்கிள் என்று அழைத்தார்.
ஆனால், வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கடைகாரர், இரண்டாவது குரலுக்கு என்ன வேண்டும் என்று மெதுவாக கேட்டார்.

அப்போது, என்னோட அண்ணனுக்கு உ டம்பு ச ரியில்லை. ம ருந்து தாங்க என்று அழுதுகொண்டே கேட்டார்.

அதற்கு பிரிஸ்கிரிப்சன் கொடுமா தருகிறேன் என்று கேட்டார். அவர் கேட்டது புரியாமல் நின்ற சிறுமி, தன்னிடம் இருந்த உண்டியலை நீட்டி இதில் உள்ள காசுக்கு தாங்க. பத்தலைன்னா வீட்டுக்கு போய் எடுத்து வருகிறேன். ம ருந்தை மட்டும் தாங்க அங்கிள் என்றார்.

பின்னர் ம ருந்து பெயரை சொல்லுமா தருகிறேன் என்று கடைகாரர் கேட்டார். . கடைக்காரர் சரிமா அழாதே என்று ம ருந்து பெயரை கூறச் சொன்னார்.

அந்த சிறுமியோ யோசித்து யோசித்து மெரிக்கிள் என்று கூறியது. கடைக்காரருக்கு புரியவில்லை. அப்படி எந்த மரு ந்தும் இல்லையேமா என்று கேட்டார்.

மெரிக்கிள் தான் அங்கிள் டாக்டர் சொன்னார். அது இருந்தால் தான் என் அண்ணன் பி ழைப்பானாம் என்று அ ழுதுகொண்டே கூறியது.

அப்போது, கடைக்காரருடன் பேசிக்கொண்டிருந்த நபர், அழாதே பாப்பா என்று அருகில் வந்தார். உன் வீட்டிற்கு அழைத்து செல், டாக்டரிடம் பேசி நான் மருந்தை நான் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

உடனே அந்த நபரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றது. அங்கு சிறுமியின் பெற்றோரை சந்தித்து விசாரித்தார் அந்த நபர்.

தனது மகனுடைய இ தயத்தில் 5 அ டைப்பு இருப்பதாகவும், அதை சரி செய்ய வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் செலவாகும் என்று டாக்டர் கூறிவிட்டார் என்றும் அ ழுதுகொண்டே கூறினர்.

அப்போது, நானும் டாக்டர் தான். பிரபலமான மருத்துவமனையில் இதய சி கிச்சை நிபுணராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர், சிறுவனின் அ றுவை சி கிச்சையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும், செலவு முழுவதையும் பார்த்துக்கொள்கிறேன் என்றும் கூறி சிறுவனை அழைத்து சென்றார்.

அ றுவை சி கிச்சையை வெற்றிகரமாக முடித்து சிறுவனையும் அந்த டாக்டர் காப்பாற்றினார். அப்போது கடவுள் போன்று என் பிள்ளையை காப்பாற்றினீர்கள் என்று பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆனால், அது என்னால் இல்லை. உங்களுடைய மகள் தான் காரணம். எதாவது மி ராக்கிள் (M i racle) நடந்தால் தான் பிழைப்பான் என்று டாக்டர் கூறியதை மருந்து என்று நினைத்துக்கொண்டு மெ டிக்கலில் கேட்டார்.

அவளுடைய அன்பு தான் என்னை உதவ வைத்தது. யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் என்று கூறிவிட்டு அந்த டாக்டர் அங்கிருந்து சென்றார்

By Admins