மேடையில் பரதநாட்டியம் ஆடும் பெண்ணை பார்த்து, பார்வையாளர் வரிசையில் இருந்த சுட்டி பெண் குழந்தை ஒன்று இசைக்கு ஏற்ப நளினத்துடன் தானும் நாட்டியம் ஆடியுள்ளது.

இதனை அருகில் உள்ளவர்கள் பார்த்து காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புக்கும் சுட்டித்தனத்திற்கும் சளைத்தவர்கள் அல்ல. அதேபோல், பார்த்ததும் எதையும் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கும் குழந்தைகளிடம் நாம் சரியானதையே செய்துகொண்டிருக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் நம்மை பார்த்து சரியானவற்றை உள்வாங்கி வளர்வார்கள். இந்த காணொளியை பார்த்து நீங்களும் ரசியுங்கள்.

 

By admin