ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிந்த பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

அப்போது இந்தியாவை சேர்ந்த அந்த நபர் கொண்டு வந்திருத்த மோதிரத்தை காட்டி அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்தார். இதை பார்த்ததும் உற்சாகம் அடைந்த ஆஸ்திரேலிய பெண் காதலை ஒப்புக்கொண்டு அந்த இந்திய இளைஞரை கட்டிப்பிடித்தார். அந்த இளைஞரை முத்தமிட்டு காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். அந்த நிகழ்வு கேமராவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு பெரிய திரையில் காண்பிக்கப்பட்டபோது மேக்ஸ்வெல் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

By Admins