நடிகர் யோகிபாபு அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் தன்னை ஹீரோ என்பது போல காட்டி விளம்பரம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே நான் நடித்த சில படங்களின் போஸ்டர்களின் என்னை முதன்மையாக கொண்டு விளம்பரப்படுத்துகின்றனர்.

இதனால், தியேட்டர் ஓனர்கள், ரசிகர்கள் என பலரும் ஏமாற்றம் அடைகின்றனர். அவர்களை மோசடி செய்வது தவறு. அதனால், இனிமேல் நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்காத படங்களின் விளம்பர போஸ்டர்களில், என்னை ஹீரோ போல விளம்பரப்படுத்த வேண்டாம்” என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

By Admins