கேரளாவில் ஒரு கர்ப்பிணி யானை வெ டி வை த்து கொ ல் லப்பட்டது அனைவரும் அறிந்ததே..அவ்வாறு கேரளாவில் யானையை வெ டி வைத்து கொன்ற மர்மநபர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.அங்கு யானைகளை தெய்வமாக மதிக்கும் கேரளாவில், கோவில் யானைகளுக்கு அளிக்கப்படும் மரியாதை காட்டு யானைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவைகள் அவற்றின் உணவு தேவைக்காக விவசாய நிலங்களை நா சப்படுத்துவதால் அவற்றை வி ரட்ட பல்வேறு யுக்திகளை மக்கள் கையாளுகின்றனர்.

கேரளா பகுதிகளில் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை ஒலி எழுப்பியும், வெ டி களை வெடிக்க வைத்தும் விரட்டுவது மக்களிடையே உள்ள பொதுவான பழக்கமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் கும்கி யானைகள் மூலமும் காட்டு யானைகளை காட்டுக்குள் துரத்தும் பணி நடக்கும். ஆனால் கேரளாவின் திருவனந்தபுரம் வனப்பகுதிக்குட்பட்ட கூத்தப்பாடம் கிராமத்தில் புகுந்த கர்ப்பிணியான  காட்டு யானைக்கு நடந்த சம்பவம்தான் அணைத்து வன ஆர்வலர்களை அ தி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடந்தது என்னவென்றால் கூத்தப்பாடம் கிராமத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் யாரோ மர்மநபர்கள் தெரிந்தோ தெரியாமலோ வெ டி மருந்தை மறைத்து வைத்து உண்ண கொடுத்துள்ளனர். யானை உண்ண தொடங்கியதும் வெடி, வெடித்து யானையின் வயிற்றுப்பகுதி சிதைந்து போனது. இருப்பினும் யானை அங்கு கிராம மக்கள் யாரையும் கா ய ப்படுத்தவில்லை.வ லி தா ங் கமுடியவில்லை இதனால் தண்ணீருக்குள் இறங்கிய யானை அப்படியே தண்ணீரிலேயே இருந்தபடி உ யி ரிழந்துள்ளது.கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதமாக்கும் யானைகளை விரட்ட அவர்களுக்கு எத்தனையோ வழிகள் இருக்க இப்படியா செய்வது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி அன்னாசி பழத்தில் வெ டி வைத்து யானையை கொ ன் றது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி யானைவெடி வைத்து கொல்லப்பட்ட தகவல் அறிந்த முதல்வர்  பினராயி விஜயன் வனத்துறை அமைச்சரை அழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த யானையை கொ ன் றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இது போன்ற மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் கண்டிப்பாக த ண் டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

யானைக்கு பி ரே த ப ரிசோ தனை செய்த மருத்துவரே நெகிழ்ந்து ஒரு பதிவு போட்டது.யானை கொ ல் லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காடு மண்டல வன அதிகாரி சுனில்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே யானையை வெடி வைத்து கொன்ற ம ர் மநபர்கள் பற்றி யாரேனும் துப்பு கொடுத்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By Admins