விமானத்தின் கழிவறையில் ரகசிய கேமராவைப் பொருத்திய மலேசிய நபரால் விமானத்தில் பாபரப்பு ஏற்பட்டுள்ளது.சாண்டியாகோ நகரிலிருந்து ஹூஸ்டன் நகருக்கு யுனடெட் ஏர்லைன்ஸ் விமானம் 646 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.

குறித்த விமானத்தில், முதல் வகுப்பில் பயணம் செய்த பெண் ஒருவர் கழிவறைக்கு சென்ற போது, கழிவறையில் ஏதோ மின்னுவது போல கண்ணாடி பகுதி இருந்ததை கண்டுள்ளார்.இதனை, கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

விமான ஊழியர்கள், விமான அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க, கழிவறையில் மின்னுவது போல இருந்த கண்ணாடி பகுதியை பரிசோதித்த விமான அதிகாரிகள் அதில் கேமரா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்து பார்க்கையில், கழிவறையில் ஒரு நபர் கேமரா பொருத்துவதை கண்டுபிடித்துள்ளனர். அந்த நபரும் குறித்த விமானத்தில் தான் இருந்துள்ளார்.

அவலீ என்ற மலேசிய இளைஞர் தற்போது ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.அவர்தான் கழிவறையில் கேமரா பொருத்தியதாக காவல்துறையினர் சந்தேகிக்கும் நிலையில், குற்றமானது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது விமான நிலையத்தில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

By Admins