நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் லாரன்ஸ்.நடந்திருக்கு பிரபு தேவாவிற்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நடன இயக்குனர் என்றால் அது லாரன்ஸ் மட்டுமே.!தமிழில் அற்புதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார்.பின்பு சில வருடங்களுக்கு பிறகு முனி திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் வெற்றி பெற அந்த திரைபடத்தில் 4 பாகங்களை எடுத்து அணைத்து பாகங்களும் வெற்றி பெற்றன. இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது,அதற்க்கு காரணம் இவர் செய்யும் நல திட்ட உதவிகளும் ஒன்று.

பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு வரும் அதிகப்படியான பணத்தால் மற்றவர்களுக்கு உதவி வருகின்றனர். ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார் அந்த வகையில் நடிகர் ராகவா லாரான்ஸ் கொடுத்த பணம் இப்பொழுது தமிழ் நடிகர்களிலேயே அதிகமான பணம் ஆகும்.

நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ 3 கோடி நிதியுதவி செய்துள்ளார் இவர் பிரதம நிவாரண நிதிக்காக ரூ 50 லட்சம் ரூபாயும் தமிழக முதல்வர் நிதிக்காக ரூபா 50 லட்மும் வழங்கியுள்ளார்மெப்சி தொழிலாளர்களுக்கு ரூ 50 லட்சமும் நடன கலைஞ்னர்களுக்காக ரூபாய் 50லட்சமும் அளித்துள்ளார் இதைவிட மேலும் மாற்று திறனாளிகளுக்காக ரூ 25 லட்சமும் மற்றும் ஏழை மக்களுக்கு ரூ 75 லட்சமும் வழங்கியுள்ளார்.

இதை கேட்ட பலரும் ராகவா லாரன்சை பாராட்டி வருகின்றனர். இவர் ஊ னமுற்றோருக்கு மட்டும் அல்ல யாருக்கு உதவி என்றாலும் செய்ய கூடியவர் என இவருடைய மனதை பாராட்டி வருகின்றனர்.

By admin