பரபரப்பை ஏற்படுத்திய விசாகப்பட்டினத்தின் விஷவாயு கசிவு சம்பவத்தின் காணொளிகள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு காரணமாக 3 பேர் பலியானதுடன் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் இந்த விஷவாயு பரவியுள்ளது.

சாலையிலேயே சென்ற மக்கள் கூட விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். அதிகாலை வந்த நச்சு வாயு புகை காரணமாக பலர் தூக்கத்தில் இருந்தே மயங்கி உள்ளனர். இதில் சிலர் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த விஷவாயு கசிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த விஷவாயு தாக்குதலில் மனிதர்கள் மட்டும் பலியாகவில்லை. விலங்குகளும் அதிக அளவில் பலியாகி உள்ளதுதான் கொடூரம். வெளியே நின்று கொண்டு இருந்த மாடுகள், ஆடுகள், நாய்கள் என்று 20 விலங்குகள் வரை இதில் பலியாகி உள்ளது.

 

இந்த விஷவாயு தாக்குதல் இன்னும் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும். இந்த வாயு காற்றில் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் வெளியே வர கூடாது. வெளியே வந்தால் நச்சு புகை தாக்க வாய்ப்புள்ளது என்று விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

By admin