ஜோதிடத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ராகு கேது பெயர்ச்சி வரும் செப்டம்பர் 1ம் தேதி அதாவது ஆவணி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்கிறது.

இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிடம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியின் மிருகசீரிடம் இரண்டாவது பதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

இந்த நிழல் கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிக அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

உங்கள் பேச்சில் நேர்த்தி இருக்கும். அதனால் நீங்கள் எடுக்கக் கூடிய செயல்கள் பேச்சு சாதுரியத்தாலும், உங்களின் சிறப்பான செயல்களாலும் வெற்றியைப் பெறும் நிலை இருக்கும்.

​ரிஷபம்

எந்த செயலாக இருந்தாலும் நிதானமாக செயல்படுவதோடு, புதிய செயல்களை தொடங்கும் போது, அல்லது திட்டத்தை செயல்படுத்தும் போது நன்கு சிந்தித்தும், ஆலோசித்தும் செயல்படுவது நல்லது.

​மிதுனம்

இந்த பெயர்ச்சி உங்களுக்கு புதிய அனுபவங்களை தரவல்லது. அதாவது நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற காலதாமதம் ஏற்பட்டாலும் அதிலிருந்து புதிய விஷயங்களையும், அனுபவத்தையும் பெற முடியும்.

​கடகம்

12 ராசிகளில் மிக அதிக நன்மைகளைப் பெறக்கூடிய அமைப்பு கடக ராசிக்கு உள்ளது. அதாவது எந்த செயலை செய்வதாக இருந்தாலும் அதை செய்து முடிக்க நம்பிக்கையும், அதற்கேற்ற மன தைரியமும் உண்டாகும். அதன் மூலம் பலரிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

​சிம்மம்

உங்கள் ராசிக்கு புது வாய்ப்புக்கள் ஏற்படும். அது உத்தியோகமாக இருந்தாலும், புதிய தொழில் குறித்ததாக இருந்தாலும், அதன் மீதான பார்வை உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும்.

​கன்னி

உங்களின் செயலில் புதுமையும், நுட்பமும் இருக்கும். அதோடு சிந்தனை செழுமையாக இருப்பதால் எந்த ஒரு கடினமான செயலையும் எளிதாக செய்து முடித்து பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

துலாம்

உங்கள் ராசியைப் பொறுத்தவரையில் பணம் மற்றும் பொருள் கொடுக்கல் மற்றும் வாங்கலில் மிக கவனம் தேவை. அப்படி இருந்தால் அனைத்தும் நன்மை தருவதாக இருக்கும்.

​விருச்சிகம்

கேது ராசியில் அமர்வதால் சற்று சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். இதுவரை இருந்த செயல் தடைகள் நீங்கி, உங்கள் மனதில் நினைத்ததை செய்து முடிக்கக் கூடிய அளவு ஆற்றலும், சூழலும் இருக்கும். அதனால் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய பொற்காலமாக இருக்கும்.

​தனுசு

ராசியிலிருந்து கேது விலகுவதாலும், ராகு 6ம் இடத்தில் அமைவது சிறப்பானது. நிழல் கிரகங்கள் 3,6ல் அமர்வது நல்ல பலனைத் தரும் என்பதால் ராகுவால் உங்கள் செயல்களில் இருந்து வந்த தடைகள் நீங்குவதோடு, உங்களின் புதிய சிந்தனை மூலம் நினைத்த இலக்கை அடைவீர்கள்.

​மகரம்

குரு ராசிக்கு வருவதாலும், ராகு கேதுவின் அமைப்பாலும் உங்களுக்கு செல்வாக்கு உயர்வதற்கான சூழல் உருவாகும். எழுத்தாளர்கள், பத்திரிக்கையில் இருப்பவர்களுக்கு அபார கற்பனை திறன் மூலம் உயரத்தை அடையாலாம். உங்கள் திறமையை மற்றவர்கள் கண்டு வியப்பார்கள்.

​கும்பம்

இதுவரை தொழில், உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும்.புதிய வேலை கிடைக்க அல்லது மாற்றம் ஆக வாய்ப்புண்டு. தொழிலில் புதிய மாற்றத்தை காண்பீர்கள். நீங்கள் செய்யும் செயலில் பெரிய முன்னேற்றத்தை காணமுடியாவிட்டாலும், ஆன்மிக சிந்தனை, ஆர்வம் உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்த எண்ணம் நீங்கள் நினைத்த செயலை செய்து முடிக்க உதவும்.

​மீனம்

பெரிய அளவு நன்மைகளும், சிறிதளவு ஏமாற்றம் உண்டாகலாம். உங்களிடம் இருந்த திறமைகள் வெளிப்படுத்தி பாராட்டுக்களையும், நற்பெயரையும் எடுப்பீர்கள். இதனால் உங்கள் நிறுவனத்தில் நல்ல முன்னேற்ற சூழலும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும் நிலவும்.

By Admins