சமீப காலமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது. இதில் தற்போது டோரா பாபு மற்றும் அவரின் நண்பர் பரதேசி (அவரோட பெயரே பரதேசி தான் பாஸ்) என்பவரும் சிக்கியுள்ளனர்.
டோரா பாபு “ஜபர்தஸ்த்” என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காமெடி நடிகர் ஆவர். இவர் அந்த மாதிரி படங்களிலும், போஜ்பூரி படங்களிலும் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில், விசாகபட்டினத்தில் விபச்சாரம் ஜரூராக நடப்பதாக போலீசுக்கு ரகசியமாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விசாகப்பட்டினத்தில் ஸ்பெஷல் போலீஸ் படை ஒன்று லோக்கல் ஏரியாக்களில் அதிரடி சோதனை செய்தது.

இதில், காம்பிளக்ஸ் ஒன்றில் டோரா பாபுவை பிடித்துள்ளனர். அவர் போலிஸிடம் தன் மீது புகார் பதிவு செய்ய வேண்டாம் என்றும் என்னுடைய பெயர் கெட்டுப்போய்விடும் கெஞ்சியுள்ளார்.

இதனை தொடர்ந்து அரைகுறை ஆடையில் அங்கிருந்த அழகிகள் மற்றும் காமெடியன் டோரா, மற்றும் அவரது நண்பர் பரதேசி இருரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin