வடகொரியா அதிபர் 20 நாட்களுக்கு பின் மீண்டும் வந்த நிலையில், தற்போது வந்தது அவர் தானா? என்றே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடகொரியாவின் சரவாதிகாரி என்றழைக்கப்படும் கிம் ஜாங் உன், சமீபத்தில் 20 நாட்களுக்கு மேலாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இதனால் அவர் இ ற ந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் அதற்கு எல்லாம் மு ற் றுப்புள்ளி வைக்கும் வகையில், திடீரென்று கடந்த 1-ஆம் நாட்டின் தலைநகர் பியோயாங்கில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றை திறந்து வைத்தார்.இந்நிலையில், தற்போது வந்தது கிம் தானா? என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் டோரி எம்.பி Louise Mensch தன்னுடைய டுவிட்டர் பக்கத்தி, இப்போது வந்த கிம்மின் பற்களும், இதற்கு முன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் பற்களும் வேறு மாதிரி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் Louise Mensch குறிப்பிட்டிருக்கும் தற்போதைய கிம்மின் புகைப்படத்தையும், வடகொரியா மாநில ஊடகங்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புகைப்படங்களும் பற்கள் நன்றாக இருக்கிறது வேறு மாதிரி உள்ளன.

அதுமட்டுமின்றி கிம் ஆள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளார். கண்ணம் எல்லாம் முன்பு இருந்ததை விட இப்போது இரண்டு மடங்கு ஊதி இருக்கிறது.

இதற்கு அவருடைய முந்தைய உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது வந்த கிம்மின் காதுக்கும், அதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருக்கும் கிம்மின் காதுக்கும் வித்தியாசமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கும் Jennifer Zeng என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடந்த 1-ஆம் திகதி வந்த கிம்மிடம் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள், பல், காது, முடி மற்றும் அவருடைய சகோதரி என்று குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், முன்பை விட கிம் இப்போது மிகவும் உடல் அளவில் ஏதோ பி ர ச்சனை சந்தித்து வருகிறார். அதற்கு அவருடைய உடல் மாற்றங்களே உதாரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

By admin