சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வியூகத்தை பற்றியும் கட்சி தனியாக செயல்படும் ஆட்சி தனியாக செயல்படும்; கட்சிக்கு வேறு தலைமை ஆட்சிக்கு வேறு தலைமை என அறிவித்தார். ரஜினியின் இந்த பேச்சு பல விமர்சனங்களுக்கு ஆளானது.

அதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற வடிவேலுவிடம் ரஜினியின் கருத்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த வடிவேலு, `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும், பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்’னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

வடிவேலுவின் இந்த விமர்சனமும் மிகவும் ப ரப ரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு சில நாட்களுக்கு பிறகு வடிவேலுவிற்கு போன் செய்த ரஜினி அவரிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும் திருச்செந்தூரில் ரொம்ப நல்ல பேசுனீங்க எனவும் பாராட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து இருவரும் மனம்விட்டு பேசியுள்ளனர். இந்த தகவலினை வடிவேலு தற்போது கூறியுள்ளார்.

By Admins