தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்திற்கு அருகில் மேட்சல் மாவட்டத்தில் காண்ட்லகோயாவில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒன்றாம் தேதியன்று 16 வயது சிறுமியை ராஜு என்ற 23 வயது கட்டிட தொழில் செய்யும் வாலிபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து திருமணத்தை நடத்தி வைத்தார் மணமகன் மற்றும் மோகனின் பூசாரி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 16 வயதான சிறுமி என்று புறப்படும் அவருக்கு உண்மையில் 16 வயது கூட இருக்காது என்று தெரியவந்துள்ளது.

ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த வரும் அந்த சிறுமி கடந்த மாதம் தான் பருவமெய்தியதாக அச்சுதராவ் போலீசிடம் கூறியிருக்கிறார். சட்டத்திற்கு எதிராக மைனர் சிறுமியை 23வயது வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. மேலும் இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

50 கும் குறைவான நபர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமண விழாவில் சமூக இடைவெளியும் பின்பற்றாமல் முகக் கவசங்கள் ஏதும் அணியாமல் பொதுமக்கள் பங்கேற்று உள்ளனர். தற்போது இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

By admin