பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் தேவ். அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில், விஜயகாந்த் நடித்த நரசிம்மா, அர்ஜூனின் பரசுராம், ஜெயம் ரவியின் மழை, லாரன்ஸின் முனி, சூர்யாவின் ஆதவன், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2, விக்ரமின் 10 எண்றதுக்குள்ள, அஜித்தின் வேதாளம் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

துரதிர்ஷ்ட வசமாக இவரது மனைவி ரினா கடந்த 2009 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு இப்போது 24 வயது ஆகின்றது.

மனைவி இறந்த பின் கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை காதலித்து வருகிறார் என்றும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும் தகவலகள் வெளியாகியுள்ளன.

இதில், அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இவர் காதலிக்கும் நடிகையான முக்தா கோட்சே என்பவருக்கு இப்போது தான் 33 வயது ஆகின்றது. ஆனால், ராகுல் தேவின் வயது 51. இருவருக்கும், 18 வயது வித்தியாசம்.

இது குறித்து ராகுல் தேவிடம் கேட்ட போது, ஒரு திருமண விழாவில் முக்தாவை சந்தித்தேன். பிறகு பேசிக்கொண்டோம். நட்பானோம். அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. பின் இருவருமே காதலில் விழுந்தோம்.

எங்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், காதலில் அது ஒரு மேட்டரே இல்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அது ஒரு பிரச்சனையாக இருக்காது’ என்று கூறுகிறார் நம்பிக்கையாக.

By admin