எகிப்தில் வ யிற்று வ லியால் அவதிப்பட்டுவந்த ஒருவரின் வயிற்றில் இருந்து உள்ளூர் பணத்தாள்கள் 6,500 பவுண்டுகளை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

கெய்ரோவின் கஸ்ர் எல் ஈனி மருத்துவமனையில் குறித்த நோயாளிக்கு மருத்துவர்கள் குழு ஒன்றால் அறுவைசிகிச்சை முன்னெடுக்கப்பட்டது.

நோய்வாய்ப்பட்ட அந்த நபர் க டுமையான வ யிற்று வ லியால் அ வதிக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். நோய் தொடர்பில் விசாரித்த மருத்துவர்களிடம் அந்த நபர், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பணத்தாள்களை விழுங்கியதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மருத்துவர்கள் குழுவால் நான்கு மணி நேரம் நீண்ட அறுவைசிகிச்சைக்கு பின்னர் அந்த நபரை ஆபத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

மொத்தம் நான்கு சுருள்களாக பணத்தாள்கள் மொத்தம் 6,500 எகிப்திய பவுண்டுகள் அந்த மனிதனின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டன.

பணத்தாள்கள் மட்டுமின்றி இன்னும் சில பொருட்களை அந்த நபரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது.

By Admins