கொரோனா உலகெங்கும் பரவி வரும் வேளையில் உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றன. வல்லரசு நாடுகளே திணறும் வேளையில்… மக்களில் ஒருவரைக் கூட இ ழக்காமல்… கொரோனாவைக் கட்டுப்படுத்திய நாடு!… இது எப்படி சாத்தியமானது…?

ஆனால் கொரோனாவின் தா க்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆனால் தெற்காசிய நாடான வியட்நாம் கொரோனாவை சிறப்பாக கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸின் பா திப்பை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அனைத்துமே திணறிக் கொண்டிருக்கும் வேளையில் வியட்நாம் மட்டும் கொரோனாவை சிறப்பாகக் கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது

மற்ற தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகியவை ஊரடங்கை நீட்டித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வியட்நாம் மட்டும் மூன்று மாவட்டங்களைத் தவிர பிற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தியுள்ளது.

 சிறப்பு நடவடிக்கைகள்

சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துள்ள வியட்நாம் ஏற்கெனவே சார்ஸ் உட்பட பல தொற்றுநோ ய் பா திப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியதுமே அந்நாட்டு அரசின் செயல்பாடுகளை தீ விரமாகக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சீனாவில் கொரோனா பா திப்பு அதிகரிக்கத் தொடங்கியதும் எல்லைகளை மூடியது வியட்நாம். முதன் முதலாக ஜனவரி மாதத்தின் இறுதியில் கொரோனா பா திப்பை எதிர்கொண்டுள்ளது.

இதையடுத்து பிப்ரவரி தொடக்கம் முதலே வெளிநாடுகளில் இருந்து வியட்நாம் வந்தவர்கள் விமான நிலையங்களில் முழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் நாடு முழுவதும் பரிசோதனைகளை தீ விரப்படுத்துதல், தொ ற்று உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல், தொ ற்று குறித்த தகவல்களை மறைப்பவர்கள் மீது சட்டபூர்வமான  நடவடிக்கை எடுப்பது  என அந்நாடு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

நகரங்கள், கிராமங்கள் என சுவரொட்டிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலமாக கொரோனா பா திப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் மிக விரைவாக கொண்டு சென்றுள்ளது.

கொரோனா பா தித்தவரை உடனடியாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியது வியட்நாம். மருத்துவப் பரிசோதனைக் கருவிகளுக்கு எந்த வெளிநாடுகளையும்  நம்பாமல் மார்ச் தொடக்கத்திலேயே அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் தொடங்கியுள்ளது.

சுமார் 90 நிமிடங்களில் கொரோனா மு டிவைக் கூறும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அந்நாட்டுக்கு பெரிதும் உதவியுள்ளன.

அத்துடன் க டுமையான ஊரடங்கும், அதை முறையாகப் பின்பற்றிய மக்களும் அங்கு கொரோனா கட்டுக்குள் வந்ததற்கான மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.

முன்னதாக அமெரிக்காவுடனான போ ரில் பே ர ழிவைச் சந்தித்துள்ள வியட்நாம் தங்கள் மீது போ ர் தொடுத்த அமெரிக்காவுக்கும் லட்சக்கணக்கான மருத்துவ ஆடைகளை ஏற்றுமதி செய்து உதவியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

By Admins