எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான படம் சுறா. இப்படம் தளபதி விஜய்க்கு 50வது படம் என்றதால், அவரது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமான சுறா படம் தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. வசூலிலும் படுதோல்வியை கடந்து இப்படம்.

ஆம் இப்படத்தின் பட்ஜட் 15 கோடியாம், ஆனால் இப்படம் திரையரங்குகளில் சரியாக ஓடாத காரணத்தினால், இப்படம் 10 கோடி வரை தான் வசூலித்தது என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு முதலில் நம்ம வீட்டு பிள்ளை என்பது தான் தலைப்பாக இருந்ததாம், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த டைட்டில் கிடைக்கவில்லையாம்.

அதன்பின் தளபதி விஜய் தான் சுறா எனும் தலைப்பை தேர்ந்தெடுத்து கொடுத்தாராம், என அப்படத்தின் இயக்குனரே தான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

By Admins