விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இன்று ரஜினிக்கு இணையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்கும் நடிகர் என்றால் விஜய் தான்.

இவர் நடிப்பில் அடுத்த மாதம் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது, இந்நிலையில் படத்தின் டீசர், பாடல்கள் கேட்கவும் ரசிகர்கள் மிக ஆவலாக இருக்க, விரைவில் இதுக்குறித்து அறிவிப்பு வரும்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரமேஷ் கண்ணா விஜய் ஏன், உன்னை நினைத்து படத்தில் சில நாட்கள் நடித்து விலகினார் என்ற விவரத்தை கூறியுள்ளார்.

இதில் ‘விஜய் இயக்குனர் விக்ரமனிடம் சென்று ”சார் இனி இது போன்ற காதல் படங்கள் எனக்கு வேண்டாம், நான் என் பாதையை ஆக்‌ஷன் கதைகளுக்கு பாதைக்கு மாற்றவுள்ளேன்” என்று கூறி’ விலகியதாக ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

உன்னை நினைத்து படத்தில் விஜய்க்கு பிறகு பிரஷாந்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து, பிறகு தான் சூர்யா உள்ளே வந்தாராம்.

By admin