திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். அக்னி சாட்சியாய் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் பலரும், அதன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறுகின்றனர். இது இன்றைக்கு மிகப்பெரிய சமூக தீங்காக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தான் தம்பதிகளின் மன முறிவுக்கு மாற்றாக, மணம் சேர்க்கைக்கான குறும்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் கதைக்கரு இது தான். ‘’கணவருக்கு இன்னொரு பெண்ணின் மீது ஆசை வருகிறது.

உடனே அவரது மனைவி ஒரு வினோதமான கோரிக்கையை வைக்கிறார். இன்று முதல் ஒரு மாதத்துக்கு மட்டும் தன்னை திருமணம் செய்த போது எவ்வளவு பாசத்தோடு இருந்தீர்களோ, அதே அளவுக்கு பாசத்தோடு இருக்க வேண்டும்.

அதன் பின்னர் நான் விவாகரத்து தருகிறேன் என்கிறார். கணவருக்கு இந்த டீல் பிடித்திருக்க அப்படியே மனைவி மீது அன்பு மழை பொழிகிறார். ஒருகட்டத்தில் மீண்டும் மனைவி மீது காதல் வயப்பட்டு கணவருக்கு மனம் மாறுகிறது.

உடனே இந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் சொல்ல வருகிறார். ஆனால் அவரோ புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். புரிதல் தான் தாம்பத்ய வாழ்வின் அடிப்படை. அந்த புரிதலுக்கும் கூட நேரம் முக்கியமானது.

அதை வாழ வேண்டிய நேரத்தில் தவறவிட்டு விட்டால் அழுது புழம்பி பலன் இல்லை என்பதையும், தாம்பத்ய வாழ்வின் சிறப்பையும் சொல்லும் இந்த குறும்படத்தை கீழே பாருங்கள்.

By admin