தன் கணவர் வெளியூரில் இருக்கும் நிலையில், கணவரின் குடும்பத்தினரால் கொ டு மை களுக்கு ஆளாக்கப்பட்ட பெண் தன் உயிரையே மாய்த்துக்கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்ரூட்டியை சேர்ந்த செந்தில்நாதனுக்கு, சென்னையைச் சேர்ந்த விக்னி நாக நந்தினிக்கும் கடந்த ஆண்டு மே 23ம் தேதி திருமணம் நடந்தது.கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலைசெய்கிறார் செந்தில்நாதன். திருமணம் முடிந்த மறுவாரமே செந்தில் சென்னைக்குப் போய்விட்டார்

.

அவரது பண்ரூட்டி வீட்டிலேயே தன் மனைவி விக்னி நாக நந்தினியை விட்டுச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த நந்தினியை செந்திலின் அப்பா சீனிவாசன், அம்மா வசந்தகுமாரி, சகோதிரி சீதாலெட்சுமி ஆகியோர் சேர்ந்து வரதட்சணைக் கேட்டு கொ டு மை ப் ப டு த்தியுள்ளனர்.

ஒருகட்டத்தில் நந்தினியை வரதட்சணைக் கேட்டு அடித்து வீட்டை விட்டும் விரட்டி விட்டனர். இதுகுறித்து நந்தினியின் அக்கா, செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். இதனிடையே செந்திலின் உறவுக்கார பெண் ஒருவரிடம் நந்தினி எஸ்.எம்.எஸில் தகராறு செய்துள்ளார். அப்போது செந்தில் நந்தினியிடம், உன்னோடு வாழமுடியாது.செ த் து த் தொலை என சொல்லியிருக்கிறார்.

உடனே இதனால் வீட்டின் இரண்டாவது மா டி யில் இருந்து கு தி த்தார் நந்தினி. இதில் அவரது இருகால் மூட்டுகளும் உடைந் த நிலையில், வாய், உதடுகளும் கிழிந்து பற்கள் உடைந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நந்தினி சிகிட்சை பெற்றுவருகிறார்.இதுதொடர்பாக செந்தில்நாதனிடம் விசாரணை நடத்திவரும் போலீஸார், தலைமறைவாக இருக்கும் அவரது பெற்றோர்களையும் தேடிவருகின்றனர்.

By admin