நடிகர் ரோவன் அட்கின்ஸன் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற பிரபல சீரிஸில் ஹிட்லராக நடிக்க உள்ளாராம்.

நடிகர் ரோவன் அட்கின்ஸன் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற பிரபல சீரிஸில் ஹிட்லராக நடிக்க உள்ளாராம்.

சிறு வயது முதல் பெரியவர்கள் வரை தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுப்பவர் மிஸ்டர் பீன் என அழைக்கப்படும் ரோவன் அட்கின்ஸன். சார்லி சாப்ளினுக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்களைக் கொண்ட நகைச்சுவை நடிகர் என்ற புகழ் பெற்றவர் ரோவன் அட்கின்ஸன்.

இந்நிலையில் அவர் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அவர் ஹிட்லர் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உற்சாகப்படுத்தியுள்ளது.

நெட்பிளிக்ஸில் வரவேற்பைப் பெற்றிருக்கும் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற தொடரின் ஆறாவது சீசனில் அவர் ஹிட்லராக நடிக்க சம்மதித்துள்ளாராம்.

By Admins