நம்ம நயன்தாராவுக்கு அடுத்தபடியா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது சமந்தா தான். ஏனென்றால் இவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹீட். வசூலை அள்ளி குவித்தவை. இவருக்கென்று உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் வெளியாகிவிட்டால் உடனே அதை திரையங்கிற்கு சென்று முதல் காட்சி பார்த்துவிட்டுதான் மறு வேலை என்று இருக்கும் தீவிர ரசிகர்கள் பட்டாளங்கள் ஏராளம்.

இவருக்கு திருமணம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது.திருமணம முடிந்த கையோடு பல படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பின்னர் நடித்த எல்லா படங்களுமே இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டால் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சினிமாவுக்கு குட் பை சொல்ல வேண்டியது தான் என்ற எழுதப்படாத விதியை உடைத்துள்ளார் சமந்தா.மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுள்ளன.

காரணம், சமந்தாவின் புகுந்த வீட்டில் எல்லோரும் நடிகர், நடிகைகள் தான். அப்படியொரு, கலை குடும்பத்தில் காலடி எடுத்து வைத்து சினிமாவில் இருந்து காலை எடுக்காமல் இன்றும் முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார்.

சமீபத்தில் கூட அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவின.இந்தநிலையில் தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதர்காக ஜிம்மிலேயே கதியாக கிடைக்கிறாராம்.மேலும் தற்போது 100 கிலோ எடை கொண்ட பளுவை அசால்டாக தூக்கும் விடீயோ இணையத்தில் வெளிவந்து வைரலாகிக்கொண்டிருக்கிறது.

By admin