கொரோனா வைரசுக்கு எதிரான போரில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவியை தொடர்ந்து, டாடா குழுமம் அடுத்த ஒரு நல்ல காரியத்தை செய்யவுள்ளது.கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை கோவிட்-19 வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது. இதில், சீனா மட்டுமே பாதிப்புகளில் இருந்து ஓரளவு மீண்டு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எஞ்சிய நாடுகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது. மேற்கண்ட நாடுகளை தவிர, உலகம் முழுவதும் இன்னும் பல்வேறு நாடுகளும் கோவிட்-19 வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸை எதிர்த்து மனித இனமே ஒன்று திரண்டு போரிட்டு வருகிறது. இதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளது.

கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளன. வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் தேவைப்படும் தற்போதைய சூழலில், அவற்றை தயாரித்து வழங்குவதற்கு, உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் முன்வந்துள்ளன.

டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் இந்தியாவின் மஹிந்திரா என பல நிறுவனங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்குவதுடன் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு நன்கொடைகளையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.டாடா குழுமமும் பல நல்ல காரியங்களை செய்துவருகிறது.

கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியாவிற்கு டாடா குழுமம் செய்து வரும் தொடர்ச்சியான நல்ல காரியங்கள், நாட்டு மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளன. இதனால் இனி டாடா தயாரிப்புகளைதான் வாங்குவோம் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருவதை பரவலாக காண முடிகிறது.

By spydy