பெண் ஒருவர் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது மாணவி தண்ணீரில் மூ ழ்கி உ யிரிழந்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் சினேகா (16). பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொ ரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வெங்கடேசன் வீட்டிற்கு வந்திருந்தார்.

மேலும் இந்த நிலையில், தனது உறவினர்களான ரவீந்திரநாத் மகன் கிரீஷ் (5), மகள் நிகிதா (2½), வெங்கடேசன் மகள் மதுஸ்ரீ (14) ஆகியோருடன் அருகில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார் தற்போது பலத்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது. 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது சினேகா ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாகவும், மண் எடுத்த ப ள்ளத்தில் நீரில் மூ ழ்கியதாகவும் கூறப்படுகிறது.

இதை பார்த்த மற்ற 3 பேரும் சினேகா மூழ்கிய பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் அவர்களும் தண்ணீரில் மூ ழ்கி உள்ளனர். இதனால் அ திர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் 4 பேரையும் கா ப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை ப ரிசோதனை செய்த போது சினேகா இ றந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மதுஸ்ரீ, நிகிதா, கிரீஷ் ஆகியோர் மேல் சி கிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உ யிரிழந்த சினேகாவின் உடலை பார்த்து உறவினர்கள் க தறி அ ழுதது ப ரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போ லிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

By Admins