மனித உடலில் பத்தாயிரம் நரம்புகள் உள்ளன. நரம்புகள் உடலில் முக்கிய பணியை செய்கின்றன. அதாவது தகவல்களை மூளைக்கும், உடலின் இதர பாகங்களுக்கும் கொண்டு செல்லும் வேலையை செய்கிறது.

சில நரம்புகள் மூளையில் இருந்து தசைகளுக்கு தகவல்களை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டு, உடலின் இயக்கத்திற்கும், இதர நரம்புகள் வலி, அழுத்தம் அல்லது வெப்பநிலை குறித்த தகவல்களை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

தகவல்களை முறையாக சுமந்து செல்வதற்கு, ஒவ்வொரு நரம்புகளுக்கு உள்ளேயும் தொகுக்கப்பட்ட சிறிய இழைகள் உள்ளன. இவைகள் நரம்புகளுக்கு பாதுகாப்பையும் வழங்குகின்றன.

இருப்பினும் சில சமயங்களில் நரம்புகள் பாதிப்படைகின்றன. நரம்பியல் சீர்கேடுகள் மற்றும் ஸ்ட்ரோக் தேசிய நிறுவனத்தின் படி, சுமார் மில்லியன் அமெரிக்கர்கள் புற நரம்பு சேதம் என்று அழைக்கப்படும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

நரம்பு பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமான அழுத்தமானது குறிப்பிட்ட நரம்புகளுக்கு கொடுக்கப்படும் போது, அந்த நரம்பு முறிவதற்கு வாய்ப்புள்ளதாம். சில சமயங்களில் சர்க்கரை நோய், லைம் நோய், அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பது, அதிகமாக மது அருந்துவது, முதுமை, வைட்டமின் குறைபாடுகள், அதிகமான டாக்ஸின்கள், நோய்த்தொற்றுகள், ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி, ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்றவற்றாலும் நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இந்த வீடியோவில்  நிமிடத்தில் கால்வலி,நரம்பு இழுத்தல்,மரத்து போதல் போன்றவற்றிக்கான மருத்துவ முறைகள் விளக்க பட்டுள்ளன.

By Admins