திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் இடையப்பட்டியைச் சேர்ந்தவர்கள் தாமரைச்செல்வி பிச்சாண்டவர் தம்பதி. கடந்த 2018-ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் ஆன நிலையில் கருவுற்றுத் தாமரைச்செல்வி கடந்த மார்ச் 9-ஆம் தேதி மணப்பாறை மாவட்ட தலைமை அரசு ம ருத்துவமனையில் நள்ளிரவில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் குழந்தைக்கு முதல் த டுப்பூசி போடப்பட்டதாகவும், அதன் பின்னர் 5 நாட்களில் அவர்கள் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தைக்குத் த டுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீ க்கம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் அவ்வப்போது கா ய் ச்சலும் வந்ததாகவும் தெரிகிறது.

குழந்தையும் தொடர்ந்து அ ழுதுகொண்டே இருந்ததால் குழந்தையின் பாட்டியான அமிர்த வள்ளி கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இரண்டாம் த டுப்பு ஊசி போடப்பட்ட மரவனூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கு ழந்தையின் தொடை வீ க்கம் குறித்து செவிலியர்களிடம் கேட்டுள்ளார். அதற்குச் செவிலியர்கள் ஐஸ் கட்டி வைத்தால் சரியாகிவிடும் என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் குழந்தையைக் குளிக்க வைக்கும்போது, குழந்தையின் தொடைப்பகுதியில் பா தி உ டைந்த த டுப்பூசி பாகம் தென்பட்டது. இந்த ஊசியைக் குழந்தையின் பாட்டி அமிர்த வள்ளி பக்குவமாக வெளியே எடுத்துள்ளார். இதனையடுத்து அ தி ர்ச்சியடைந்த கு ழந்தையின் பெற்றோர்கள் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குச் சென்று, தலைமை மருத்துவ அலுவலர் வில்லியம் ஆண்ட்ரூஸிடம் பு கார் அளித்துள்ளனர்.

By Admins