கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் யூஏஇயில் நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் முதல் ஆட்டம் அபுதாபியில் துவங்குகிறது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த தொடர் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே மைதானத்தில் இருப்பர். அவர்களுக்கு தனித்தனி பாதுகாப்பு வலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மைதான மேலாளர் நவ்தீப் வீடியோ மூலம் விளக்கியுள்ளார். அதில் இரு அணி வீரர்கள் தங்க தனித்தனி அறைகளும், பயிற்சிக்கு தனித்தனி மைதானமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அறைகள் மற்றும் மைதானத்திற்கு அடிக்கடி சானிடைசர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டம் நடைபெறும் போது வெளி ஆட்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

By Admins