இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது பிகில். இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் பட்டி,தொட்டியெங்கும் மெகா ஹிட் அடித்தது.

அதிலும் குறிப்பாக பெண்களிடம் இந்த பாடல் பாசிட்டிவ் ரீச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பாடலுக்கு நடனமாடி பல பெண்கலும்கூட டிக்டாக் வீடியோ வெளியிட்டனர்.

இந்த வரிசையில் ஒரு இளைஞர் ஆடிய நடனம் இப்போது சோசியல் மீடியாக்களில் செம வைரல் ஆகிவருகிறது. ஸ்ரீஜித் என்ற அந்த அந்த வாலிபர், சிங்கப்பெண்ணே பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி இருக்கிறார்.

அதை டிக்டாக்கில் வெளியிட்டுள்ள அவர், இந்த நடனம் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என்றும் எழுதியிருக்கிறார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்…

By Admins