கொரோனா ஊரடங்கு அறிவித்ததில் இருந்து தன்னால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். மத்திய மாநில அரசுகளுக்கும் சுமார் 3 கோடி வரை நிதிஉதவியும் வழங்கியுள்ளார்.

அதைமட்டும் இல்லாமல், நடிகர் சங்கத்துக்கு ரூ.25 லட்சம், விநியோகஸ்தர்களுக்கு ரூ.15 லட்சத்துக்கான காசோலையை, நடன கலைஞர்கள், ஊனமுற்றோர் இப்படி பலருக்கும் பலவிதமான உதவிகளை செய்துள்ளார்.

இவர் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக பெறும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 3,385 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.750 வீதம் ரூ.25,38,750 தொகையை தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உதவி செய்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்த தகவலை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தெரிவித்துள்ளார். அதை ராகவா லாரன்ஸூம் ட்வீட் செய்துள்ளார்.

By Admins