கேரளாவில் லாட்டரி டிக்கெட் அடித்து பெண் ஒருவருக்கு 60 லட்சம் ரூபாய் விழுந்துள்ள சம்பவமானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஆலப்புழா எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு உட்பட்ட வெள்ளப்பள்ளி காலனி என்னுமிடத்தில் லேகா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவரின் பெயர் பிரகாஷ். இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிரகாஷ் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். லேகா லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் பிரகாஷ் லாரி விபத்தில் சிக்கினார். அவருடைய தினசரி வேலைகளுக்கு இன்னொருவரின் உதவி தேவைப்பட்டது. இதனால் லேகா தான் பார்த்து வந்த லாட்டரி டிக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டார்.

நேற்று மதியம் லேகா 3 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். அவற்றுள் மதியம் 3 மணியளவிற்கு ஒரு சீட்டுக்கு 60 லட்சம் ரூபாய் விழுந்துள்ளது. மேலும் 8000 ரூபாய் மதிப்புள்ள 11 பரிசுப்பொருட்களும் கிடைத்துள்ளன. இதனால் லேகா குடும்பத்தினர் பெரும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த பணத்தில் லேகா சொந்த வீடு கட்ட ஆசைப்படுகிறார். மேலும் அதிகாரிகளிடம் லாட்டரி சீட்டுகளை ஒப்படைத்துவிட்டு ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த செய்தியானது ஆலப்புழா மாவட்டத்தில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin