பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மா ரடைப்பு காரணமாக அவர் உ யிரிழந்த சம்பவம் திரையுலகினர்களை பெரும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பழயை நடிகர் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனின் மருமகன். சுமார் நான்கு வருடங்கள் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்த சிரஞ்சீவி சார்ஜா.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து, இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார் சிரஞ்சீவி சார்ஜா. நடிகை மேக்னா ராஜும், சிரஞ்சீவியும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா ராஜ் க ர்ப்ப மாக இருக்கிறார் என்ற தகவல் இப்போது தெரியவந்துள்ளது. அவர் நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். குழந்தையை எதிர்பார்த்திருந்த நேரத்தில் இப்படியொரு அ திர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருப்பது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இந்த விஷயத்தை இன்னும் சில மாதங்கள் கழித்து சிரஞ்சீவி சார்ஜாவும் மேக்னா ராஜூம் வெளியே அறிவிக்க இருந்தனர். அதற்கு முன்பாக சில மூத்த நடிகர், நடிகைகளிடம் இதை தெரிவித்து ஆசி பெற்றுள்ளனர். நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமலதாவும் நடிகை, தாராவும் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

By admin