42 நாட்களுக்கு பின்பு அறிகுறியே இல்லாமல் மீண்டும் கொரோனா… பெண்ணிற்கு 19 முறை நடத்தப்பட்ட சோ தனை! அனைத்திலும் பாசிட்டிவ் கேரளாவில் கொரோனா பா திப்பு காரணமாக 42 நாட்களாக மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருவது க வலையை ஏற்படுத்தியுள்ளது.இன்னமும் அந்த பெண்ணுக்கு குணமாகாதது வ ருத்தத்தை அளிக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கும் வேளையில், நாட்டிலேயே முதல் முதலாக கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்ட கேரளாவில் இதுவரை 408க்கு மேல் பேர் வைரஸ் பா திப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதே நேரம் அங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அனைவரும் குணமடையும் இந்நிலையில் கேரளாவில் கொரோனாவால் பெரிதும்  பா திக்கப்பட்ட 62 வயது பெண் ஒருவர் கடந்த 42 நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வெளிநாடு  இத்தாலி சென்று வந்தவர்களிடம் இருந்து அந்த பெண்ணுக்கு நோ ய்த்தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து கொரோனா அறிகுறிகளுடன் இருந்த அந்த பெண் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பின் குணமாகியுள்ளார். தற்போது கொரோனா அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படுவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை 19 முறை நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும் முடிவு பா சிட்டிவாகவே இருந்து வருகிறதுஎன்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

கேரள மருத்துவர்கள் அந்தப் பெண்ணை முற்றிலுமாக குணப்படுத்த தீ விர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அ பாயம் உள்ளதால் அவர் மருத்துவமனையிலே வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்

By Admins