அனைத்து வயதினரும் சந்திக்கும் பொதுவான ஒரு பெரிய பிரச்சனை தான் வயிற்று அல்சர். இது இரைப்பைச் சுவற்றில் ஏற்படும் காயங்களினால் உண்டாவதாகும். ஹெலிகோபேக்டர் பைலோரி என்னும் பாக்டீரியல் தொற்றுக்களால் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் தொடர்ச்சியாக ஆஸ்பிரின், ஐபுப்ரோஃபென், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மருந்துகளை எடுத்தால், அவை வயிற்று அல்சரைத் தூண்டும்.

வயிற்று அல்சர் இருக்கும் போது மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொண்டும், சில உணவுகளைத் தவிர்க்கவும் வேண்டும். அல்சர் இருப்பவர்களுக்கு என்று டயட் எதுவும் இல்லை.

ஆனால் சில உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம், ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும் ஒரு ஆராய்ச்சி குழுவினர் குறிப்பிட்ட சில உணவுகள் ஹேலிகோபேக்டர் பைலோரி என்னும் பாக்டீரியாவை எதிர்த்து, வயிற்று அல்சரில் இருந்து விடுவிப்பதாக கூறுகின்றனர்.

 

இக்கட்டுரையில் வயிற்று அல்சர் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவை உட்கொள்ள வேண்டுமென கொடுக்கப்பட்டுள்ளது.

 

By Admins