கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிவரை இந்திய மக்கள் அனைவரும் ஊடங்கினை கடைப்பிடிக்குமாறு இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதற்கடுத்து வீட்டில் முடங்கிக்கிடக்கும் மக்களை மகிழ்விக்கும் வகையில் இந்திய சினிமா பிரபலங்கள் தங்களாலான முயற்சியை எடுத்து வருகின்றனர்.

அதன் வரிசையில் “பசங்க” படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கதாநாயனாக நடித்துவரும் விமல் ஒரு படிமேல் சென்று களத்தில் இறங்கிவிட்டார். முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஒரு துப்பரவு பணியாளரைப்போல் தனது சொந்த ஊரான திருச்சியையடுத்துள்ள பண்ணன்கொம்பு கிராமத்தில் வீடெங்கும் சென்று ஸ்பிரே அடித்து சுத்தம் செய்து வருகிறார்.

விமலின் மனைவி அக்ஷயா ஒரு மருத்துவர். அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவர் குறித்து பேசிய விமல், அவரின் செயல் எனை நெகிழ வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கு மனைவி அக்ஷயா, கடந்த வாரம் வரையிலும் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். கர்ப்பிணி என்பதால் அவருக்கு விடுப்பு கொடுத்திருக்கிறார்கள். எனினும் அவர் விடுப்பு எடுக்காமல் தன்னால் முடிந்த வரை மருத்துவ சேவை ஆற்றியுள்ளார்.

இதனால் அவரை சக மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் கைத்தட்டி பாராட்டியுள்ளனராம். இது குறித்து தெரிவித்த விமல் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

By spydy