காதல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை சந்தியா தற்போது சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.

காதல் படம் சந்தியாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள்.

சந்தியாவின் உண்மையான பெயர் ரேவதி. இவர் சினிமா உலகத்திற்காக சந்தியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

சந்தியா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

காதல், டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில், வெள்ளித்திரை, மகேஷ் சரண்யா மற்றும் பலர், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நூற்றுக்கு நூறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இவர் நடித்த காதல்,டிஸ்யும் படங்கள் தந்த வெற்றிக்குப் பிறகு வேறு எந்தப் படமும் பெரிய அளவு வெற்றியை தரவில்லை.

பின் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் சந்திர சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

தற்போது சந்தியா சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல கண்மணி சீரியலில் நடிகையுள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது எந்த கதாபாத்திரம் என்று தான் தெரியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்காகியுள்ளனர்.

மிக பெரிய நட்சத்திரமாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சந்தியா திருமணம் முடித்து நடிப்பை நிறுத்தியிருந்தார். தற்போது சின்னத்திரையில் மீண்டும் நடிக்க வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

By Admins