நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் பரத்தின் “பழனி” படத்தில் இவர் ஹீரோயினாக அறிமுகமான போது, இவரெல்லாம் ஹீரோயினா என்று பலரும் ஏளனமாக பேசினார்கள்.

ஆனால், தன்னுடைய திறமையால் இன்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் அம்மணி. சினிமாவை பொறுத்த வரை, அதிகமான புகழ் பெற்ற பிரபலங்கள் காணாமல் போவதும், கிண்டலடிக்கப்ட்ட பிரபலங்கள் வளர்ந்து நிற்பதும் சகஜம்.

இப்போது, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.இந்த படம் இவரது திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் – படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் மேடம் டூஸாட் மியூசியத்தில் காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை இடம் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் நடிகை காஜல் அகர்வால் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

By admin