கொரோனா வார்டில் நடந்த வித்தியாசமான கல்யாணம் !! கவச உடையில் மணப்பெண் !! மருத்துவனையில் நடந்த திருமணத்தை பாருங்க !!

Tamil News

கொரோனா உலகையே ஆட்டிக்கொண்டிருக்கிறது.நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.அரசும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.கொரோனா வார்டுகளில் அவ்வப்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பதை நாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம்.

அதே கொரோனா வார்டில் இப்போது ஒரு கல்யாணமே நடந்துள்ளது. இந்த சுவாரஸ்யமான திருமணம் பற்றித் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேரளத்தின் அழப்புழை பகுதியை சேர்ந்தவர் சரத். சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அபிராமி என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்தக் கல்யாணத்திற்காக சவுதியில் இருந்து கடந்த இருவாரங்களுக்கு முன்பு ஆழப்புழைக்கு வந்தார் மாப்பிள்ளை சரத்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய சரத்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேநேரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் தேதி, முகூர்த்த நாளில் இவர்கள் கல்யாணமும் இருந்தது,

முகூர்த்த நாளை மாற்றிக்கொள்ள பென், மாப்பிள்ளை வீட்டில் விரும்பாததால் கொரோனா வார்டிலேயே கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்தனர் இதில் உறவினர்கள் கலந்துகொள்ளவில்லை.

இருகுடும்பத்தினர் மட்டுமே வந்தனர். கல்யாணப் பொண்ணு அபிராமி முழு உடலையும் மூடிய கொரோனா கிட்டோடு வந்திருந்தார். கொரோனா நோயாளியான மாப்பிள்ளை சரத் தாலி கட்டினார். இப்போது கொரோனா வார்டில் நடந்த இந்த கல்யாணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.