27 வருட தன் காதல் மனைவியைப் பிரிகிறார் பில்கேட்ஸ்! அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவால் பரபரப்பு?

Latest News Life Style

வில்லியம் ஹென்றி கேட்ஸ்(பில் கேட்ஸ்) உலக பணக்கார பட்டியலில் தொடர்ந்து பண்ணிரெண்டு வருடங்களாக முதல் இடத்திலிருப்பவர்… பல இளைஞர்களின் ரோல் மாடல்களாக திகழும் இவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை மென்பொருள் வல்லுனராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்… மிகப் பெரிய தொழிலதிபர்களில் இருந்து சாமானிய மக்கள் வரை பிரபலமானவர்..

கடந்த 1994ம் ஆண்டு, அவருடன் பணி புரிந்த மெலிண்டாவை திருமணம் செய்துக் கொண்டார்… அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்… அவரும், அவர் மனைவியும் இணைந்து பில்& மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஒன்றையும்  நடத்தி வருகிறார்.. இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம், பல குழந்தைகளுக்கு கல்வியும், மருத்துவ உதவியும் செய்து, மக்கள் மனதில் இந்த தம்பதியர்கள் சிறந்த இடத்தை பெற்றிருந்தனர்…

இந்நிலையில்.. திடீரென அவர் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்… அதில் அவர் “எங்களுடைய 27 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில், அழகான மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம், அனைத்து மக்களும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, எங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்யும் வகையில் அறக்கட்டளைகளை நிறுவியுள்ளோம்… இது தொடர்ந்து இணைந்தே செயல்படும் என்பதற்கான நம்பிக்கையை தருகிறோம்… ஆனால் இதற்கு மேல் எங்கள் வாழ்க்கையில், ஜோடியாக ஒன்றாக வளர முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை… அதனால் நாங்கள் இருவரும் முழு மனதாக பிரிகிறோம்…  என்று தெரிவித்துள்ளார்…

இதுகுறித்து பல பேர் அவர்கள் ட்விட்டில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்… அதில் இவ்வளவு சம்பாதித்து என்ன பயன்? குடும்ப வாழ்க்கையில் இத்தனை வருடங்களுக்கு பின் இப்படி ஒரு தோல்வியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்…. இதைபற்றி தங்கள் மேலான் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…