அப்போது நான் 2 மாத கர்ப்பம்.! அது எனது கடைசி படமும் கூட..!! விஜயுடன் நடித்தபோது நடந்த ச ம் ப வ த் தை பகிர்ந்த நடிகை மாளவிகா…!!!

Cinema News Entertainment Tamil News

தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்நடிகை மாளவிகா. சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான “உன்னை தேடி” திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார் மாளவிகா.

2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த “பேரழகன்” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் தலை காட்டினார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், தனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன் “குருவி” படத்தில் ‘டண்டானா டர்னா’ பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பற்றி கூறினார்.

விஜய்யுடன் டான்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால், நன்றாக நடனம் ஆட முடியாமல் போனதில் வருத்தமுண்டு.

அந்த பாடலில் எளிதாக உடலை அசைப்பது போன்ற ஸ்டெப் தான் இருக்கும். அது எனது கடைசிப் படமும் கூட. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், மனதில் பதியும்படி, சிறந்த நடனத்தை கொடுத்திருப்பேன் என்று பழைய நினைவுகளை பகிர்ந்தார் மாளவிகா.