தெறி படத்தில் நடித்த கைக்குழந்தையா இது? இவ்வளவு பெரிய பிள்ளயாயிட்டா? இணையத்தில் தீ யாய் பரவும் புகைப்படம்!!!

Tamil News

அட்லீ இயக்கத்தில், இளைய தளபதி விஜய் மற்றும் சமந்தா, எமிஜாக்சன், நடிப்பில் வெளிவந்த படம் தெறி… இதில் ராதிகா சரத்குமார், விஜய்-யின் அம்மாவாக நடித்திருப்பார்… விஜய்-க்கும் இவருக்கும் வரும் காட்டிகளெல்லாம் அவ்வளவு எதார்த்தமாக இருக்கும்…

இதில் விஜய்-க்கு மகளாக, நடிகை மீனாவின் மகள் நடித்திருப்பார்… தந்தை மகள்களுக்கிடையேயான பாசம் எல்லாம் பெரிதாக பேசப்பட்டது… என்னதான் எமிஜாக்சன், விஜய் ஜோடி ஆரம்பத்தில் இருந்தே இருந்தாலும்? விஜய் சமந்தா ஜோடி தான் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது…

அதிலும், அவர்களின் சந்திப்பு, காதல், பிரிவு, திருமணம். இழப்பு எல்லாவற்றையும் சில நிமிடங்களில் என்றாலும், அழுத்தமாகவே பதித்திருப்பார், இயக்குநர் அட்லீ… அதனுடன் மொட்டை ராஜேந்திரன், விஜய் காமெடி கலாட்டாகள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது…

காட்சிகள் மட்டுமல்ல… பாடல்களும் அனைவருக்கும் பிடித்துப்போனது… அதிலும் என் ஜீவன் பாடல் இப்போது வரை அனைத்து தரப்பு வயதினருக்கும் மிகவும் பிடித்த பாடல் லிஸ்டில் உள்ளது.. மூன்று வருட வாழ்க்கையை வெறும் மூன்று நிமிட பாடலில் அழகாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்…

 

அந்த பாடலில். விஜய், சமந்தா விற்கு ஒரு வயதில் ஒரு கைக்குழந்தை இருக்கும்… பார்ப்பதற்கே சமந்தாவின் குழந்தை என்று சொல்லும் அளவுக்கு, தேவதை போல் ஜொலித்த அந்தக் குழந்தை.. அதன் பின் எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை.. யார் அந்த குழந்தை? என்று பல தரப்பில் இருந்தும் தேடப்பட்ட நிலையில். தற்போது அந்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது..

யார் என்று தெரியாத அந்த கைக்குழந்தைக்கு இப்போது நான்கு வயதாகிறதாம்… கைக்குழந்தையா பார்த்த குழந்தை இப்போது பட்டுபாவடையில் குட்டிப்பாப்பாவாக, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது… காலங்கள் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது… மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்..