உங்களுக்கு சரவணன் மீனாட்சி சீசன் 1 பிடிக்குமா? ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி!!!

Tamil News

சரவணன் மீனாட்சி.. விஜய் டிவி-யில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது… ஆரம்பித்த சில அத்தியாயங்களிலேயே மக்களின் மனதை பறித்துக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும்…

இதில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜா சந்திரனும் நடித்திருப்பார்கள்.. இவர்கள் ஏற்கனவே மதுரை சீரியலில் ஜோடியாக நடித்திருந்தனர்… அவர்களின் ஜோடிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்கள்.

இவர்களின் ஜோடியை தாண்டி, அதில் நடித்த அத்தனை நடிகர்கள், டெக்னீசியர்கள் அனைவருக்குமே வெற்றியை அள்ளிக் குவித்தது… அதிலும், அதில் வரும் டைட்டில் பாடல் ஏலேலோ பாடல் இப்போது வரை பலரின் ரிங்டோனாக இருந்தது… அதில் சரவணனுக்கு அப்பாவாக நடித்த ராஜசேகர் சாரும், மீனாட்சிக்கு அப்பாவாக நடித்த வைத்தியநாதனும் இப்போது உயிரோ டு இல்லை..

ஆனாலும் இப்போது வரை நம் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்…சீரியலில் இவர்கள் ஜோடியை பார்த்த பலரும், இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக வேண்டும் என ஆசைப்பட்டனர்… அது போக செந்தில் ஸ்ரீஜா இருவரும் சேர்ந்து நடித்த விளம்பரப் படங்கள் கூட பெருமளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது…

அதன் பின் திடீரென, செந்தில், ஸ்ரீஜா இருவரும் சீரியலை விட்டு விலக… ரசிகர்களுக்கு அவ்வளவு வருத்தம்.. அதன் பின் சீசன் 2, சீசன் 3 வேறு நடிகரால் எடுக்கப்பட்டது… ஆனாலும் பர்ஸ்ட் இம்பரெசன் பெஸ்ட் என்பது போல.. இப்போது வரை சரவணன் மீனாட்சி சீசன் 1 அனைவருக்கும் மிகப்பிடித்தமான ஒன்று தான்… இருவரும் சீரியல் முடிந்த பின் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவது போலவே,, இருவரும் உண்மையாகவே திருமணம் செய்து கொண்டனர்..

அதன் பின் விஜய் டிவியில் மாப்பிள்ளை சீரியல் இணைந்து நடித்தனர்.. அடுத்ததாக, கல்யாணம் கன்டிசன் அப்ளை வெப் சீரிஸ் நடித்துள்ளனர்..  இப்போது ஸ்ரீஜா செந்தில் முழு நேர, ஹவுஸ் ஒயிப்பாக மாறிவிட்டதால், நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.. மிர்ச்சி செந்தில் இப்போது அதே விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்…

அதிலும் இந்த லாக்டவுனில், பல பேர் விஜய் டிவி யிடமே.. சரவணன் மீனாட்சி சீரியலை ரிபிட் போடுமாறு கேட்டு வருகின்றனர்… ஒரு வேளை இந்த ஊரடங்கு மேலும் தொடர்ந்தால், விஜய் சூப்பரில் மீண்டும் ஒரு முறை போட வாய்ப்பு இருப்பதாக சீரியல் ஆட்கள் தெரிவித்து வருகின்றனர்…

 

அதுக்கு ஒரு ஐம்பது சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும், அதன் உண்மை தன்மையை விளக்கியுள்ளனர்.. இந்நிலையில்.. 2012 ஆம் ஆண்டு மிகப் பிரபலமான சீரியலில் முதல் இடத்தில் இருந்தது நம் சரவணன் மீனாட்சி சீசன் 1 தானாம்…  ஒரு வாரம், இரண்டு வாரம் இல்லை.. முழுதாக ஒரு வருட கணக்கெடுப்பில் சொல்லப்பட்டுள்ளது…

அதில் சரவணன் மீனாட்சி (விஜய் டிவி) 2012 ஆம் ஆண்டிற்கான தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நிகழ்ச்சிகளாக வெளிவந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த தமிழ் சீரியல். விஜய் டிவிக்கு சொந்தமானது என்றாலும், பிரபலமான பட்டியலில் அதிகபட்ச எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகளுடன் சன் டிவி ஆதிக்கம் செலுத்துகிறது. போட்டியிடும் சேனல்களின் மத்தியில் கூட, இது ஒரு கூட்டு புகழ் மதிப்பெண் 40% ஆகும். பிரபலமான தரவரிசையில் ராஜ் டிவியின் ஒரே நிகழ்ச்சி சிந்து பைரவி, இது இந்தி நிகழ்ச்சியான உத்தரனின் டப்பிங் பதிப்பாகும்.

கீழேயுள்ள வரைபடம் இந்த ஆண்டின் சிறந்த 5 தமிழ் சீரியல்களை குறிக்கிறது, அவர்களின் பார்வையாளர்களின் பதிலைக் குறிக்கும் பிரபல மதிப்பெண் !! மேலே கொடுக்கப்பட்ட உத்தரவு முற்றிலும் பிரபலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, தரவரிசை டிஆர்பி மதிப்பீடுகளின் அடிப்படையில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…