பூவிழி வாசலிலே லாலா பாப்பா யார் தெரியுமா? இப்ப அவங்க மிகப்பிரபலமான சீரியல் நடிகை!!!

Tamil News

எத்தனை பேருக்கு, பூவிழி வாசலிலே என்ற படத்தின் பெயரை சொன்னால் தெரியும் என்று எனக்கு தெரியவில்லை… ஆனால் அதில் நடித்த லாலா பாப்பா புகைப்படத்தை பார்த்தால், போதும் அனைவரும் அந்த குழந்தை படத்தை பார்த்தால் நினைவுக்கு வரும்.

பாசம், பயம், அழுகை போன்ற எல்லா உணர்வுகளையும் பூவிழி வாசலிலே படத்தில் அந்த குழந்தை படம் முழுக்க வெளிகாட்டி பேசியே ஒரே வார்த்தை… அல்ல எழுத்து… “லா.. லா…” மட்டும் தான். காது கேளாத, வாய் பேச முடியாத கதாபாத்திரம்.

இன்றும் பூவிழி வாசலிலே என்ற வார்த்தை கேட்டவுடன் முதலில் நினைவிற்குக் வருவது இந்த குழந்தையின் பால் வடியும் முகமும், அந்த அசத்தல் நடிப்பும் தான். சரி, இந்த குழந்தை யார், இவர் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என உங்களுக்கு தெரியுமா? டிவி, சினிமா உலகை தாண்டி வெகு சிலருக்கு மட்டுமே இவர் யார் என்று தெரியும்.

ஏன், உங்களுக்கும் இவரை தெரியும். ஆனால், இவர் தான் அந்த பூவிழி வாசலிலேவில் நடித்த குழந்தை என்பதை தவிர்த்து… தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள, விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா தான் பூவிழி வாசலிலே படத்தில் நடித்த அந்த குழந்தை…

இவர் பிறந்த 41வது நாளில் இருந்தே நடிக்க துவங்கிவிட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்! இவர் பிறந்தது ஜூலை 12, 1983ல். அதே ஆண்டில், தான் பிறந்த 41வது நாளில் இவர் அப்பாஸ் எனும் மலையாள படத்தில் நடிகை கே.ஆர். விஜயாவின் பேத்தியாக நடித்திருந்தார்

சுஜிதா கேரளாவின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு ஒரு அண்ணனும், தங்கையும் இருக்கிறார்கள். இவரது பெற்றோர் டி.எஸ் மனு மற்றும் ராதா. இவரது அண்ணன் சூர்யா கிரண் எனும் இயக்குனர் ஆவார். சூர்யா கிரண் நடிகை கல்யாணி என்கிற காவேரியை திருமணம் செய்துக் கொண்டவர். இவர் காசி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாகவும், சமுத்திரம் படத்தில் சரத் குமாரின் தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுஜிதா 2012ல் விளம்பர தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. சினிமா என்றால் என்ன, கேமரா என்றால் என அறியும் முன்னரே நடிக்க துவங்கியவர் சுஜிதா… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…