நாம் இருவர் நமக்கு இரு வர் சீ ரியலில் ர சிகர்களுக்கு ஒரு அ தி ர் ச் சி செ ய் தி..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் ப ர ப ர ப் பா ன வி ஷ ய ம் ..!

Tamil News

பொதுவாக சீரியலில் முதல் பாகம் நன்றாக மக்களிடையே வரவேற்பை பெற்றால் அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படும். அந்த சீரியலும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெறும் சில நேரங்களில் தோல்வியும் அடையும்.

அந்த வகையில் விஜய் டிவியில் பெரிதும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதில் கதாநாயகனாக, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, நடிகை ரச்சிதாவும் நடித்துள்ளார்..

இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மதுரை, சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியலில் நடித்துள்ளார். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பல திருப்புமுனையை கொண்ட ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில், தற்போது யாரும் எதிர்பாராத விஷயம் நடந்துள்ளது. என்னவென்றால், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது முத்துராசு எனும் வில்லன் கதாபாத்திரம் வலுவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் முத்துராசு இறந்துவிடுவது போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளதாம். இந்த தகவல் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.