46 வயதாகியும் நடிகை சித்தாரா இந்த காரணத்துக்காகவா! திருமணம் செய்து கொள்ளவில்லை? வெளிவந்த உண்மை!!!

Tamil News

அதென்னவோ? பல நடிகைகள் இன்று வரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்ற தகவல்களே? பல வருடங்களுக்கு பின் தான் வெளிவருகிறது.. சில சமயம், நாம் பார்த்து வியந்து பார்க்கும் பல பிரபலங்களின் சோகங்கள் கூட நமக்கு நடிப்பாகவே தெரிந்து விடுகிறது.. சினிமா என்ற மாயையை விலக்கிப்பார்த்தால், சாமானிய மனிதர்கள் வாழ்வை அவர்கள் இழந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது…

 

அந்த வரிசையில் நடிகை சித்தாரா, ஒரு இந்திய திரைப்பட நடிகை.. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பெயர் பெற்றவர்.. கே பாலசந்தர் அவர்களின் புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.. படையப்பா, புது வசந்தம் போன்ற படங்கள் எல்லாம் இன்று வரை மக்களுக்கு பிடித்த படங்களில் ஒன்று..

தொடர்ந்து முப்பது வருடங்களாக, திரையுலகில் வலம் வரும் இவர், அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்… அவரது சமீபத்திய தெலுங்கு வெற்றி படங்களில், சங்கராபுரம், பாலே பேலே மகதிவோ என்ற படங்கள் அடங்கும்… கின்னஸ் சாதனைப் படைத்த ஈசக் இயக்கிய நாகேஷ் திரையரங்கத்துடன், சித்தாரா கோலிவுட் படங்களுக்கு மீண்டும் வருகிறார்…

அவரது தந்தை பரமேஸ்வரன் நாயர், மின்சார வாரியத்தில் பொறியாளராகவும், அவரது தாயார் மின்சார வாரியத்தில் அதிகாரியாகவும், பணியாற்றியுள்ளனர்.. மேலும் இவருக்கு பிரதீஷ் மற்றும் அபிலாஷ் என்ற இரண்டு தம்பிகள் உள்ளனர்.. அது போக 46 வயதாகியும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையாம்…

அதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஏன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கு.. திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான் தான் எடுத்தேன்.. அதற்கு காரணம், நான் என் வாழ்க்கையில் முக்கியமான நபரை இழந்துவிட்டேன், அவர் வேறு யாரும் இல்லை.. என் தந்தை தான்.. அதனாலோ என்னவோ? நம் வாழ்க்கையில் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்… அதனால் நான் என் திருமணத்தை பற்றி சிந்திக்கவே இல்லை… என  தெரிவித்துள்ளார்..