ஓ… இவரு நடிகர் மாதவனின் மகனா? அவர் மகன் செய்த சாதனையால் குவியும் பாராட்டுகள்! நெகிழ்ச்சியில் மேடி!!!

Tamil News

முக்கிய குறிப்பு – இது ஆக்டர் மேடி! நாட் பார் மோ டி.. சோ நோ ட் ரோல்… சரி இப்ப நம்ம விசயத்துக்கு போவோம்…

நடிகர் மாதவன் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர்… சாக்லேட் பாய் என்ற இடத்தில் அப்போது மட்டுமில்லை.. இப்போது வரை அவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார்.. அதென்னவோ? மேடி என்றாலே பொண்ணுங்க எல்லாம் அவர் மேல் பையத்தியமாக சுற்றி திரிவது வழக்கம் தான்.. அவருக்கு தற்போது வயது 51 ஆகிறது..

ஆனால் சமீபத்தில் கூட ஒரு ரசிகை! நான் மாதவனை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.. அதற்கு அவரும்.. இதென்னா? புது டேக்லைனா? என ஜாலியாக கேட்டிருப்பார்.. அதற்கு அந்த ரசிகையோ? நான் இப்பவும் உங்களோட தீவிரமான பேன் தான்.. ஆனா நான் எதார்த்தமாதான் கேட்டேன்.. ஆனா இவ்வளவு தூரம் ஆகும்னு நான் நினைக்கல என சொல்லியிருப்பார்..

இவர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான அலைப்பாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.. முதல் படத்திலேயே தமிழ்ப்பெண்களின் மனதைக் கொள்ளைக்கொண்ட மாதவன், அதன் பின் மின்னலே, ஜே ஜேஜே, டும் டும் டும்.. என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்தார்… தற்போது அவர் நடிப்பில் வெளியான மாறா திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது..

தமிழில் மட்டுமில்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி,என பல மொழிகளிலும், இன்று வரை வெற்றிப்படங்களை தந்திருக்கிறார்.. இவர். சினிமாவில் வெற்றிப்பெற ஆரம்பிக்கும் முன்னே காதலில் வெற்றிப்பெற்று தன் காதலி சரிதாவை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்…

அவருக்கு வேதாந்த் என்ற ஒரு மகனும் இருக்கிறார்… அவர் ஒரு மிகச்சிறந்த நீச்ச்ல் வீரர் ஆவார்… சிறுவயதில் இருந்து இப்போது வரை பல போட்டிகளில் கலந்துக்கொண்டு பல மெடல்களை வென்றுள்ளார்.. அதென்னவோ? நடிகர் மகன் நடிகர்தான் ஆவான்.. என்ற கொள்கையை அடியோடு மறுத்துவிட்டு, அவருடைய தனித் திறமையால், தன் அப்பாவை பெருமைப்படுத்தியிருக்கிறார்.. சமீபத்தில் ஆசிய அளவிலான போட்டியில் வெள்ளிப்பதக்கமும், வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.. என்பது குறிப்பிடத்தக்கது..