என்னடா இது? இப்படி ஒட்டு மொத்தமா அந்த சேனல்-ல விட்டுட்டு எல்லாரும் வந்துட்டா! அப்புறம் எப்படி டா! அந்த சீரியல் ஒடும்?

Tamil News

விஜய் டிவி யில் இருந்து சன் டிவி, கலர்ஸ் தமிழ் என அனைத்து சேனல்களும்.. போட்டி போட்டு சீரியல்களை ஒளிப்பரப்பி வருகின்றனர்.. இந்நிலையில் சன் டிவியில் சீரியலில் நடிக்கும் ’ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ்க்கு ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகை ஜோடியாகியுள்ளார்.

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ். சீரியலுக்கு வருவதற்கு முன்னர், குளிர் 100 டிகிரி, நீயும் நானும், சகாக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் ராஜா ராணி சீரியலே அவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மேலும் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

ராஜா ராணி சீரியலுக்குப் பின் விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலில் பிரியங்கா அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது காற்றின் மொழி சீரியல் நிறைவடைந்த நிலையில், சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் சஞ்சீவ் நடிக்கிறார்.

சன் டிவியில் சஞ்சீவ் நடிக்கும் சீரியலுக்கு ‘கயல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீரியலில் சஞ்சீவ்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் எல்லோரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த சைத்ரா நடிக்கவுள்ளார் என சீரியல் குழு அறிவித்துள்ளது. கயல் சீரியல் சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. சீரியலில் படபிடிப்பு ஆரம்பமானதை வெளிப்படுத்தும் விதமாக, நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

என்னடா இது? இந்த ஜீ தமிழ்-ல இருந்து இப்படி எல்லாரும் வந்துட்டா? அப்புறம் அவுங்க எப்படிடா சீரியல் எடுத்து டி.ஆர்.பி வாங்குறது// என ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…